பள்ளத்தில் வீழ்ந்தது முச்சக்கரவண்டி; ஒருவர் பலி, இருவர் காயம்

பள்ளத்தில் வீழ்ந்தது முச்சக்கரவண்டி; ஒருவர் பலி, இருவர் காயம்

பள்ளத்தில் வீழ்ந்தது முச்சக்கரவண்டி; ஒருவர் பலி, இருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 2:38 pm

பதுளையில் முச்சக்கர வண்டியொன்று சுமார் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

பதுளை – பசறை வீதியில் இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படல்கும்புர பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும், பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்