நீர் மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது – இலங்கை மின்சார சபை

நீர் மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது – இலங்கை மின்சார சபை

நீர் மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது – இலங்கை மின்சார சபை

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 9:42 am

நீர் மின்சார உற்பத்தி 28 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

மின்சார தேவையின் 70 வீதம் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக பூர்த்தி செய்யப்படுவதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரான பிரதி பொது முகாமையாளர் செனஜித் தசநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு வீத மின்சாரத்தை காற்றலையின் மூலம் பெற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால், அந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்