தேவ்யானி மீண்டும் சொந்த நாட்டிற்கு…

தேவ்யானி மீண்டும் சொந்த நாட்டிற்கு…

தேவ்யானி மீண்டும் சொந்த நாட்டிற்கு…

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 6:52 pm

விசா மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்ச்சைக்குள்ளான இந்திய இராஜதந்திரியான தேவ்யானி கொப்ரகடே இன்று நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்புவதற்கு முன்னர் அமெரிக்க விமான நிலையத்தில் கருத்துத் தெரிவித்த தேவ்யானி தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும், மீ்ண்டும் தாம் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிருபிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தன் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது குரல் கொடுத்தவர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

விசா மோசடி மற்றும் பணிப்பெண் ஒருவரை மோசமாக நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தேவ்யானி கொப்ரகடே கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த விவகாரங்களை அடுத்து அமெரிக்க மற்றும் இந்திய இராஜதந்திர உறவுகளில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்