சுசில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

சுசில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

சுசில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 8:04 pm

ஜனநாயகக் கட்சியின் கொலன்னாவ தொகுதி பிரதம அமைப்பாளர் சுசில் கிந்தெல்பிட்டிய இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

அண்மையில் அடையாளம்தெரியாத இருவர் தம்மை பற்றி பலரிடம் விசாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று எழுத்துமூல முறைபாபாட்டினை சமர்ப்பித்த சுசில் கிந்தெல்பிட்டிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோருக்கும் இந்த முறைப்பாட்டின் பிரதிகளை அனுப்பிவைத்ததாக ஜனநாயகக் கட்சியின் கொலன்னாவ தொகுதி பிரதம அமைப்பாளர் சுசில் கிந்தெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்