சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 கிளர்ச்சியாளர்கள் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 கிளர்ச்சியாளர்கள் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 கிளர்ச்சியாளர்கள் பலி

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 2:29 pm

சிரியாவின்  ஹோம்ஸ் நகரில் அரச படையினர் நடத்திய தாக்குதலில் 45 கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனினும் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஒன்றுக்கு பிரவேசிக்க முற்பட்ட கிளர்ச்சியாளர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

முக்கிய பிராந்தியங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்