குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 5:18 pm

கண்டி – ரங்கல – வேரபிட்டிய பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

65 வயதான மூதாட்டியே குளவிக் கொட்டுக்கு இலக்காகி  உயிரிழந்ததாக துங்ஹின்ன கிராமிய  வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த பெண் உயிரிழந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் கணவர், துங்ஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்