இந்திய மீனவர்கள் 40 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இந்திய மீனவர்கள் 40 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இந்திய மீனவர்கள் 40 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 2:11 pm

இந்திய மீனவர்கள் 40 பேரின் விளக்கமறியலை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் நீடித்துள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடந்த மாதம் 29 ஆம் 30 ஆம் திகதிகளில் இவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த மீனவர்களும் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை இம்மாதம் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களது 9 படகுகளும் கடற்படையினரின் பொறுப்பில் உள்ளன.

இதேவேளை, இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரின் விளக்கமறியல் நான்காவது தடவையாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.

படகு விபத்துக்குள்ளானதாலி் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இவர்கள் கடந்த மாதம் ஐந்தாம் திகதி கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மீனவர்கள் நால்வரும் நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்