ஆப்கானிஸ்தானில் கைதிகள் சிலரை விடுதலை செய்ய தீர்மானம்

ஆப்கானிஸ்தானில் கைதிகள் சிலரை விடுதலை செய்ய தீர்மானம்

ஆப்கானிஸ்தானில் கைதிகள் சிலரை விடுதலை செய்ய தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 11:42 am

ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலரை விடுதலை செய்யவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

விடுதலை செய்யப்படவுள்ளவர்களுள் தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாமையால் விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எந்தவித குற்றங்களும் இழைக்காத தமது நாட்டுப் பிரஜைகளை தொடர்ந்தும் தடுத்து வைக்க விரும்பவில்லை என்று ஆப்கானிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இது குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றவர்கள்  விடுதலை செய்யப்படுகின்றமை ஆபத்து என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்