YouTube இல் கலக்கும் ஜப்பான் கால்பந்து வீரரின் காணொளி

YouTube இல் கலக்கும் ஜப்பான் கால்பந்து வீரரின் காணொளி

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 12:14 pm

ஜப்பானைச் சேர்ந்த கால்பந்து வீரர் சுன்சுக் நக்கமுராவின் காணொளி ஒன்று  YouTube இல் தற்போது மிகப்பிரபலம்.

ஜப்பானில் திருமண வைபவம் ஒன்றில், மணமக்களுக்காக வடிவமைக்கப்பட்டிருந்த கேக் ஒன்றின் நுனியில் வைக்கப்பட்டிருந்த பொம்மையை கால்பந்தால் தாக்கி வீழ்த்திய காணொளியே அது.

நக்கமுரா 20 அடி தூரத்திலிருந்து ஒரே உதையில் இலக்கைத் தாக்கி திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மிகத் துள்ளியமாக கேகிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதேவேளை பொம்மையை முழுமையாக கேக்கிலிருந்து வெளியேற்றியிருக்கிறார் நக்கமுரா.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்