2002இல் காணாமல் போனவர் கொலை; மனைவி கைது

2002இல் காணாமல் போனவர் கொலை; மனைவி கைது

2002இல் காணாமல் போனவர் கொலை; மனைவி கைது

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 1:00 pm

2002 ஆம் ஆண்டு வலஸ்முல்ல – மொரகன்தேகொட பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே, இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போனதாக கூறப்படுபவரின் மனைவி உள்ளிட்ட சிலர் ஒன்றிணைந்து, குறித்த நபரை கொலை செய்து, வீட்டிற்கு பின்புறம் புதைத்துள்ளதாக, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் வலஸ்முல்ல பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் காணாமல்போனவரின் மனைவி, வலஸ்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்