ஹொரனையில் உணவு விஷமடைந்த சம்பவம்; விசாரணை வெற்றியளிக்கவில்லை – சுகாதார அமைச்சு

ஹொரனையில் உணவு விஷமடைந்த சம்பவம்; விசாரணை வெற்றியளிக்கவில்லை – சுகாதார அமைச்சு

ஹொரனையில் உணவு விஷமடைந்த சம்பவம்; விசாரணை வெற்றியளிக்கவில்லை – சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 8:54 am

ஹொரனை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழிற்சாலையொன்றில் உணவு விஷமடைந்து, அதன் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் வெற்றியளிக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் உட்கொண்ட எந்தவொரு உணவின் மாதிரியும், பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

பொதுசுகாதார அதிகாரிகளினால், சமைக்காத கோழி இறைச்சிகள் மாத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடாத்துவதற்கு, பொரளை மருத்துவ ஆய்வு நிறுவனத்திடம் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்ததாக, நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டிற்கு உறுதி செய்திருந்தார்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளிலிருந்து, எந்தவிதமான  விஷத்தன்மையும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இந்த தொழிற்சாலைக்கு உணவு விநியோகித்த நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மத்தேகொட பகுதியைச் சேர்ந்த என தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்