ஸ்டீபன் ஜே ரெப் யாழ். விஜயம்

ஸ்டீபன் ஜே ரெப் யாழ். விஜயம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 8:06 pm

இலங்கை விஜயத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களை கையாளும் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்த ரெப் உள்ளிட்ட குழுவினர் முதலில் யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதன் பின்னர் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் அமெரிக்க விசேட தூதுவர் கலந்துரையாடியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சந்திப்புகளில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்