வரி செலுத்தாத வர்த்தக நிலையங்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கை

வரி செலுத்தாத வர்த்தக நிலையங்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கை

வரி செலுத்தாத வர்த்தக நிலையங்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 9:01 am

கொழும்பு நகரை அண்மித்து, வரிபணம் செலுத்தாத வர்த்தக நிலையங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வரி செலுத்த வேண்டிய பெரும்பாலான வர்த்தகர்கள், அதனை செலுத்தாதுள்ளதாக  உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மல்லிகா சமரசேகர தெரிவிக்கின்றார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், புதிய வரி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையினால், அதனை வர்த்தகர்கள் உரிய வகையில் செலுத்துகின்றார்களா என்பது குறித்து ஆராய்வதே இதன் நோக்கம் என அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்