லஸந்த விக்ரமதுங்க; ஐந்தாண்டுகளின் பின்னரும் தொடரும் நினைவலைகள்

லஸந்த விக்ரமதுங்க; ஐந்தாண்டுகளின் பின்னரும் தொடரும் நினைவலைகள்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 10:26 pm

மனிதாபிமானத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் எதிராக விடுக்கப்பட்ட ஓர் மிலேச்சத்தனமான சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் ஆகின்றன.

பல திறமைகளைக் கொண்ட லஸந்த விக்ரமதுங்க, உண்மையை வெளிக்கொணரும் வகையில் சண்டே லீடர் பத்திரிகையை ஆரம்பித்தார்.

குற்றம் இழைப்போர் சமூகத்தில் எந்த தராதரத்தில் இருந்தாலும், அவர்கள் தொடர்பில் செய்தி வெளியிட லஸந்த பின்வாங்கவில்லை.

பல்வேறு விமர்சனங்களுக்கும், அச்சுறுத்தலுக்கும் மத்தியில் அநீதிக்கு எதிராக குரல்கொடுத்த ஓர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லஸந்த விக்ரமதுங்க.

தெஹிவளை அத்திடிய வீதியூடாக தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவர் மீதான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

லஸந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 5 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதனுடன் தொடர்புடைய குற்றவாளிகள் யார்? என்பது இன்னும் இரகசியமாகவே உள்ளது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லஸந்த விக்ரமதுங்கவை நினைவுகூர்ந்து இன்று பொரளையில் பிரார்த்தனை நடைபெற்றது.

பொரளை கனத்தை மயானத்தில் நடைபெற்ற இந்த நினைவு தின நிகழ்வில் லஸந்த விக்ரமதுங்கவின் குடும்ப உறவினர்களும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்