மன்னார் மனித புதைகுழி அகழ்வு; ஆயர் நேரடியாக பார்வையிட்டார்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு; ஆயர் நேரடியாக பார்வையிட்டார்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு; ஆயர் நேரடியாக பார்வையிட்டார்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 11:27 am

மன்னார், ஏ_32 வீதியின் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் மேலும் 6 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் மனித புதைகுழியிலிருந்து 30க்கும் அதிகமான எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இந்த மனித புதைகுழியிருந்து மீட்கப்பட்ட எலும்புக்க கூடுகள் அடையாளம் இடப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன.

நேற்யை தினம் மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்ணம முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரட்ன தலைமையில் புதைகுழி தோண்டும் பணிகள் முன்னெடுக்கபபட்டது.

மழைக்கு மத்தியிலும் புதைகுழியினை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதாக எமது செய்தியளார் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வரம் மாந்தை வீதிக்கு அண்மையில் இந்த புதைகுழி அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுவரை 8.5 மீற்றர் நீள, 1.8 மீற்றர் அகலத்தில், 1.1 மீற்றர் ஆழம் வரையில் குறித்த புதைகுழி தோண்டப்பட்டுள்ளது.

இந்த புதைகுழியை அண்மித்த பகுதிகளில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கும் என சந்தேகிக்கப்படுவதால் அந்த பகுதியை அண்மித்த இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புதைகுழி தோண்டும் பணிகளை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்  ஆண்டகை நேரடியாக பார்வையிட்டதாகவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அந்த பகுதியில் நீர்குழாய்களை பொருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த சிலரால் மனித புதைகுழி அவதானிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

இதன்போது, மனித மண்டையோடுகள் மற்றும் எச்சங்கள் சில கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

mannar skeleton 2 mannar skeleton 3 mannar skeleton 4 mannar skeleton 5 mannar skeleton 6 mannar skeleton 7

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்