மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 9:09 am

மன்னார் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பேசாலை பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்