போதைப்பொருள் விநியோகத்தின் பின்னணியில் அரசியல் செயற்பாடுகள் உள்ளது – சுசில்

போதைப்பொருள் விநியோகத்தின் பின்னணியில் அரசியல் செயற்பாடுகள் உள்ளது – சுசில்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 9:44 pm

ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தின் பின்னணியில் அரசியல் செயற்பாடுகள் காணப்படுவதாக ஜனநாயக் கட்சியின் கொலனனாவை தொகுதி அமைப்பாளர் சுசில் கிந்தெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொலன்னாவை தொகுதியில் முல்லேரியா வடக்கு பகுதி மற்றும் கலனிமுல்ல ஆகிய பகுதிகளில் கட்சி செயற்பாட்டாளர்களின் சந்திப்பொன்று நேற்று மாலை அம்பதலேயில் நடைபெற்றது.

ஜனநாயக் கட்சியின் கொலனனாவை தொகுதி அமைப்பாளர் சுசில் கிந்தெல்பிட்டிய தெரிவித்த கருத்து :-

“யார் இவற்றைப் பெறுகின்றனர். அரசியலுடன் தொடர்புடையவர்களே இவற்றைப் பெறுகின்றனர். இவற்றை கலந்து யாருக்கு புகட்டுகின்றனர். எனக்கும் உங்களுக்கும் தான் புகட்டுகின்றனர். குறைந்த விலைக்கு எதனோல் கொண்டு வந்து அவற்றைக் கலந்து புகட்டுகின்றனர்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்