புறக்கோட்டையில் 104 கடைகள் தீக்கிரை; எலி அல்லது எண்ணெய் விளக்கே காரணம்

புறக்கோட்டையில் 104 கடைகள் தீக்கிரை; எலி அல்லது எண்ணெய் விளக்கே காரணம்

புறக்கோட்டையில் 104 கடைகள் தீக்கிரை; எலி அல்லது எண்ணெய் விளக்கே காரணம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 8:38 am

அண்மையில் புறக்கோட்டை போதிராஜா மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 104 கடைகள் தீ பற்றியமை தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது.

குறித்த இடத்தில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் பரிசோதனைகளை நடத்தியிருந்ததாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

[quote]அறிக்கைக்கமைய இந்த தற்காலிக கடைகளில் 77 ஆவது கடையில் இருந்த எண்ணை விளக்கொன்று விழுந்தமையால் அல்லது குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் எலிகளின் செயற்பாடினால் இந்த தீ பரவியிருக்கலாம் என அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாரிய மனித செயற்பாடுகளினால் நிகழ்ந்ததல்ல என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்