பிரதமருக்கு எதிரான பேரணியில் அமைதியின்மை; பிளவர் வீதி மூடப்பட்டது

பிரதமருக்கு எதிரான பேரணியில் அமைதியின்மை; பிளவர் வீதி மூடப்பட்டது

பிரதமருக்கு எதிரான பேரணியில் அமைதியின்மை; பிளவர் வீதி மூடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 1:43 pm

கொழும்பில் பிக்குகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டி.எம். ஜயவர்தனவை, புத்தசாசன அமைச்சு பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு வலியறுத்தி கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று காலை ஆரம்பமானது.

பிரதமர், மகா சங்கத்தினரை பகிரங்கமாக விமர்சித்தமைக்கு எதிராக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் பிரதமர் அலுவலகத்திற்கு பிரவேசிக்க முற்பட்ட வேளையிலேயே இந்த இந்த அமைதியின்மை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இதேவேளை கொழும்பு, பிளவர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

primeminister 4 primeminister 5 primeminister 3 primeminister 2

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்