பாவனைக்கு உதவாத நெத்தலி கைப்பற்றல்

பாவனைக்கு உதவாத நெத்தலி கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 8:25 pm

நுகர்வுக்கு உதவாத சுமார் 47,000 கிலோகிராம் நெத்தலியை வத்தளை, ஹெந்தல பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான நெத்தலி கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 3 கொள்கலன்களில் இருந்த நெத்தலி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா மாவட்ட பிரதம அதிகாரி ரஞ்ஜித் வீரவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்