தேவ்யானி விவகாரத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

தேவ்யானி விவகாரத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

தேவ்யானி விவகாரத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 4:06 pm

இந்திய இராஜதந்திரியான தேவ்யானி கோப்ரகடேயின் கைது விவகாரத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்பிரகாரம் ஜனவரி 16 ஆம் திகதி முதல் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரங்களில் வர்த்தக நடவடிக்கைகைகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

தேவ்யானி கோப்ரகடே கைது விவகாரத்தில், அமெரிக்கா தனது கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள தொடர்ந்தும் மறுத்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க தூதர்களின் வாகனங்களினால் விபத்துக்கள் நேரும் பட்சத்தில் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது..

விசா மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என  தேவயானி கோப்ரகடே சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு அமெரிக்க அரசு தரப்பு சட்டத்தரணிகள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேவ்யானியின் கைது விவகாரம் இந்தியா – அமெரிக்கா இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்