தாழமுக்கம் வலுவிழந்துள்ளது, சீரற்ற வானிலை மாறும் – வளிமண்டலவியல் திணைக்களம்

தாழமுக்கம் வலுவிழந்துள்ளது, சீரற்ற வானிலை மாறும் – வளிமண்டலவியல் திணைக்களம்

தாழமுக்கம் வலுவிழந்துள்ளது, சீரற்ற வானிலை மாறும் – வளிமண்டலவியல் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 9:32 am

மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் நிலைக்கொண்டிருந்த தாழமுக்கமானது, தற்போது வலுவிழந்து அரபிக் கடலை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டிற்கு அருகில் நிலைக்கொண்டிருந்த தாழமுக்கமானது தற்போது வலுவிழந்துள்ளமையினால், இதுவரை ஏற்பட்டிருந்த சீரற்ற வானிலையில் மாற்றம் ஏற்படும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்