டெல்லியில் பழைய பஸ்களை தங்குமிடங்களாக மாற்ற ஆம் ஆத்மி நடவடிக்கை

டெல்லியில் பழைய பஸ்களை தங்குமிடங்களாக மாற்ற ஆம் ஆத்மி நடவடிக்கை

டெல்லியில் பழைய பஸ்களை தங்குமிடங்களாக மாற்ற ஆம் ஆத்மி நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 2:43 pm

டெல்லியில் வீடில்லாமல் நடைபாதைகளில் தங்கி கடும் குளிரில் அவதிப்படும் ஏழை மக்களை, கைவிடப்பட்ட பழைய பஸ்களை தற்காலிக  புகலிடமாக மாற்றி தங்கவைக்கும் திட்டத்தினை ஆம் ஆத்மி கட்சி செயற்படுத்தவுள்ளது.

டெல்லியில் ஏராளமான பழைய அரச பஸ்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளன. அதனை சற்று புதுப்பித்து கூரையுடன் கூடிய ஏழைகளுக்கான இரவுக் கூடாரமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் தங்குபவர்களுக்கு போர்வைகள் மற்றும் பிற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்த யோசனையை  தொடர்ந்து, அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் ஃபேஸ்புக் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போதே, டெல்லியில் வீடில்லாதவர்களுக்கு இரவில் தங்குவதற்கான புகலிடம் கட்டி கொடுக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

இதேவேளை, டெல்லியின் 218 பகுதிகளில் 4,018 பேர் வீடில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்கட்டமாக இவர்களை பழைய பேருந்துகளில் தங்கவைக்கவும், அதனைத் தொடர்ந்து சுமார் 100 இரவுநேர புகலிடங்களை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்