கடந்த வருடம் 15,000 சாரதிகள் தவறிழைத்துள்ளனர்

கடந்த வருடம் 15,000 சாரதிகள் தவறிழைத்துள்ளனர்

கடந்த வருடம் 15,000 சாரதிகள் தவறிழைத்துள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 12:52 pm

கடந்த ஆண்டு போக்குவரத்து நடவடிக்கைகளின்போது தவறிழைத்த 15,000 சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரத்தில், இலக்கமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவிக்கின்றது.

நீதிமன்றத்தினால் குற்றவாளி என அடையாளம் காணப்படும் சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரத்தில் இலக்கமிடப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எச்.எஸ்.ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்துதல், விபத்துக்கள் இடம்பெறும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளின், சாரதி அனுமதிப்பத்திரத்தில் இலக்கமிடும் நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறி 24 புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் சாரதிகளின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்