ஐந்து வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய பெண் கைது

ஐந்து வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய பெண் கைது

ஐந்து வயது குழந்தை மீது கொதி நீரை ஊற்றிய பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 9:21 am

அலவத்துகொட – விலானகம பகுதியில் ஐந்து வயதான குழந்தையொன்றை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

சில தினங்களுக்கு முன்னர், குழந்தையின் சித்தியினால், குறித்த குழந்தையின் மீது கொதி நீர் ஊற்றப்பட்டுள்ளதாகவும், கைகள் மற்றும் கால்கள் காயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த குழந்தை தற்போது அக்குரணை வைத்தியசாலையில்  சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணை, கண்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்