எட்டு இலட்ச ரூபா பணத்துடன் கொட்டாஞ்சேனை வர்த்தகரை காணவில்லை

எட்டு இலட்ச ரூபா பணத்துடன் கொட்டாஞ்சேனை வர்த்தகரை காணவில்லை

எட்டு இலட்ச ரூபா பணத்துடன் கொட்டாஞ்சேனை வர்த்தகரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 12:31 pm

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த வர்த்தகர், நேற்று முன்தினம் முதல் காணாமற்போயுள்ளதாக அவரது மனைவியினால் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கொட்டாஞ்சேனை பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு – பிரதான வீதியிலுள்ள கிழங்கு ஏற்றுமதி – இறக்குமதி நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய அருணாசலம் சங்கரலிங்கம் என்ற வர்த்தகரே காணாமற்போயுள்ளார்.

கடமை நிமித்தம் நேற்று முன்தினம் அரச வங்கியொன்றுக்கு சென்ற குறித்த வர்த்தகர் பணத்தை மீளப் பெற்றுள்ளதாகவும், அதன்பின்னரே அவர் காணாமற்போயுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கியிலிருந்து மீளப் பெறப்பட்ட 8 இலட்சம் ரூபா பணத்தை காணாமற்போன சந்தர்ப்பத்தில் அவர் தன்வசம் வைத்திருந்ததாகவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை எனவும் கொட்டாஞ்சேனை பொலிஸார் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்