எக்னெல்லிகொட வழக்கின் சாட்சியாளருக்கு பிடியாணை

எக்னெல்லிகொட வழக்கின் சாட்சியாளருக்கு பிடியாணை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 8:49 pm

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெல்லிகொட காணாமல்போனமை தொடர்பில், சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சி விசாரணை ஹோமாகம நீதவான் வை.ஆர்.சீ. நெலும்தெனிய முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இதன்போது சாட்சியம் அளிப்பதற்காக, ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று சமூகமளிக்காத காரணத்தினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு மனுதாரர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு விசாரணைகள் மீண்டும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்