இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்தும் – அமெரிக்கா உறுதி

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவனம் செலுத்தும் – அமெரிக்கா உறுதி

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 7:12 pm

இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பில் மனித உரிமை பேரவை கவனம் செலுத்துமென அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்  சர்வதேச குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் போர் குற்றங்களைக் கையாளும் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னர் புதைகுழி தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பட்டையும், ரெப்பிடம் தெரிவித்ததாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்