அரச நிறுவனங்களின் ஆவணங்களை மொழிப்பெயர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

அரச நிறுவனங்களின் ஆவணங்களை மொழிப்பெயர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

அரச நிறுவனங்களின் ஆவணங்களை மொழிப்பெயர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 8:47 am

அரச நிறுவனங்களிலுள்ள ஆவணங்களை மொழிப்பெயர்க்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தை அரச கரு மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களிலுள்ள ஆவணங்களும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, மீண்டும் அரச நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

அனைத்து அரச நிறுவனங்களினாலும் அனுப்பி வைக்கப்படுகின்ற ஆவணங்கள், மொழி பெயர்ப்பு மத்திய நிலையத்தினால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, மின்னஞ்சல் ஊடாக மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலைகள், நேரம் மற்றும் தவறுகளை இந்த நடவடிக்கையின் ஊடாக குறைத்து கொள்ள முடியும் எனவும் அரச கரு மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர் மல்காந்தி விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்