அம்மன் கோவிலுக்கு அருகில் அடையாளம் காணப்படாத சடலம்

அம்மன் கோவிலுக்கு அருகில் அடையாளம் காணப்படாத சடலம்

அம்மன் கோவிலுக்கு அருகில் அடையாளம் காணப்படாத சடலம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 12:26 pm

புத்தளம் – மன்னார் வீதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள நீரோடையொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பொன்றுக்கு அமைய, இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்