GSLV விண்கலத்தை விண்ணில் செலுத்த நேரக் கணிப்பீடு ஆரம்பம்

GSLV விண்கலத்தை விண்ணில் செலுத்த நேரக் கணிப்பீடு ஆரம்பம்

GSLV விண்கலத்தை விண்ணில் செலுத்த நேரக் கணிப்பீடு ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 3:36 pm

தமது சொந்த தொழில்நுட்பத்துடன் கூடிய என்ஜின் பொருத்தப்பட்ட விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

இதற்கான நேர கணிப்பீடு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

GSLV விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி  விண்ணில் செலுத்தப்படவிருந்தது.

அத்துடன் GSAT-14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளையும் அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.

எனினும் விண்கலத்தில் இரண்டாவது நிலை என்ஜினில் திரவ எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விணகலத்தை விண்ணில் செலுத்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இந்த விண்கலத்துடன் GSAT-14 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் நாளை மாலை 4.18 அளவில் குறித்த விண்கலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இதற்கான 29 மணி நேர கணிப்பீடு இன்று காலை 11.20 மணியளவில்  ஆரம்பிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள்’ செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்