வீரம் முரட்டுக்காளை மீள் உருவாக்கமல்ல – சிவா

வீரம் முரட்டுக்காளை மீள் உருவாக்கமல்ல – சிவா

வீரம் முரட்டுக்காளை மீள் உருவாக்கமல்ல – சிவா

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 4:44 pm

வீரம் படம் முரட்டுக்காளை படத்தின் மீள் உருவாக்கம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, விதார்த், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரம்.

விஜயா நிறுவனம் தயாரித்துள்ள ‘வீரம்’  இம்மாதம் 10ஆம் திகதி வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான ‘வீரம்’ படத்தின் போஸ்டர்கள், படங்கள். முன்னோட்டக் காட்சிகளை பார்த்த பிறகு, இது ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து இயக்குநர் சிவாவிடம் கேட்டபோது, ”இந்தப் படம் அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டது. ஆனால். ‘முரட்டுக்காளை’யின் ரீமேக் அல்ல.

அண்ணன், தம்பிகளின் கதை என்பதால் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்தப் படத்தின் சாயலும் இதில் இருக்காது,

மலையாளப் படமான ‘வெள்ளியேட்டன்’ படத்தின் தழுவல் என்று கூறப்படுவதும் தவறான தகவல். ‘வீரம்’ படம் நேரடித்  தமிழ்ப் படம்” என்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்