வர்த்தக நிலையத்தில் தீ

வர்த்தக நிலையத்தில் தீ

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 6:07 pm

தலங்கம பிரதேசத்தில் இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றில் இன்று பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இன்று பிற்பகல் 3.35 மணியளவில் இந்த தீ பரவியதாக கொட்டாவ தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

தீயை அணைப்பதற்காக கொழும்பு மற்றும் கல்கிஸ்ஸ தீயணைப்பு படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டாவ தீயணைப்பு பிரிவின் 2 வாகனங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது.

இந்த தீக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

Thalangama Fire newsfirst (2) Thalangama Fire newsfirst (3) Thalangama Fire newsfirst (4) Thalangama Fire newsfirst (5) Thalangama Fire newsfirst (7)

படங்கள் – மலித பத்திரன (U reporter – தலங்கம)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்