அனுராதபுரம் யாழ். சந்தியில் ரயில் விபத்து; கடற்படை வீரர் பலி

அனுராதபுரம் யாழ். சந்தியில் ரயில் விபத்து; கடற்படை வீரர் பலி

அனுராதபுரம் யாழ். சந்தியில் ரயில் விபத்து; கடற்படை வீரர் பலி

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 10:23 am

வடபகுதி ரயில் மார்க்கத்தில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

கடற்படை வீரர்கள் சிலர் பயணித்த கெப் வாகனம் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ரயில் விபத்தில் காயமடைந்த கடற்படை வீரர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயிலுடன், அனுராதபுரத்திலுள்ள யாழ். சந்தி கடவையில் கடற்படை வீரர்களின் கெப் வாகனம் விபத்துக்குள்ளானதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மூடப்படிருந்த ரயில் கடவையை தாண்டிச்செல்ல முற்பட்டபோதே கடற்படையினரின் வாகனம் விபத்துக்குள்ளானதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் நிஹால் ஃபெர்டினேண்டஸ் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்