மேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரத்திற்குள் கலைக்கப்படும் – கெஹெலிய ரம்புக்வெல்ல

மேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரத்திற்குள் கலைக்கப்படும் – கெஹெலிய ரம்புக்வெல்ல

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 9:41 am

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் அடுத்த வாரத்திற்குள் கலைக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாகாண சபைகள் கலைக்கப்படுகின்றமை தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவிலயாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதன்போது இந்த மாகாண சலைகள் கலைக்கப்படும் திகதி குறித்தும் ஊடகவியலாளர்கள் அமைச்சரவை பேச்சாளரிடம் வினவியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்னும் ஓரிரு நாட்களில் கலைக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும், இல்லாவிட்டால், அடுத்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் கலைக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்