மெத்திவ்ஸ் சிறப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்கு 302

மெத்திவ்ஸ் சிறப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்கு 302

மெத்திவ்ஸ் சிறப்பான ஆட்டம்; பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்கு 302

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 1:58 pm

இலங்கைக்கு அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 302 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் இறுதி நாளான இன்று 5 விக்கெட் இழப்பிற்கு 480 ஓட்டங்களை பெற்ற நிலையில் இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டதை நிறுத்திக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 157  ஓட்டங்களையும், கௌஷல் சில்வா 81 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஜுனைட் கான் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் தனது முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

யுனிஸ் கான் 136 ஓட்டங்களையும், மிஸ்பா வுல் ஹக் 135 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை பந்து வீச்சில் ரங்கன ஹேரத், சமிந்த எரங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழத்தினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இனிங்ஸில் 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஜுனைட் கான் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியினை விட 179 ஓட்டங்களால் பின்னிலையில் இலங்கை, தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்து 5 விக்கெட்டுக்களை இழந்து 480 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்