மன்னார் மனித புதைகுழியில் இன்றும் அகழ்வு பணி

மன்னார் மனித புதைகுழியில் இன்றும் அகழ்வு பணி

மன்னார் மனித புதைகுழியில் இன்றும் அகழ்வு பணி

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 9:49 am

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

அந்த பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வின்போது மேலும் ஐந்து மனித மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுவரை 15 மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில மனித எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மனித புதைகுழி தொடர்பிலான விசாரணைகள் மன்னார் விசேட பொலிஸ் குழுவினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மனித புதைகுழி அமைந்துள்ள பகுதி நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உயிரிழந்தவர்களை கண்டறிவதற்கான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைய, அனுராதபுரம் வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பேராதனை பல்கலைக்கழக மண் ஆய்வுப் பிரிவின் நிபுணர் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்