மத்திய ஆபிரிக்க குடியரசு மோதலால் 9 இலட்சம் பேர் இடம்பெயர்வு

மத்திய ஆபிரிக்க குடியரசு மோதலால் 9 இலட்சம் பேர் இடம்பெயர்வு

மத்திய ஆபிரிக்க குடியரசு மோதலால் 9 இலட்சம் பேர் இடம்பெயர்வு

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 3:57 pm

மத்திய ஆபிரிக்க குடியரசில் தொடரும் மோதல்களினால் நாட்டு சனத்தொகையில்  பெரும் எண்ணிக்கையிலானோர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இதுவரையிலும் 9,35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

இரு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதலை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 1,500 பிரான்ஸ் படையினரும் 4000 அமைதிக்காக்கும் படையினரும் மத்திய ஆபிரிக்க குடியரசில் நிலைகொண்டுள்ளனர்.

இதேவேளை மக்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்கி வந்த நிறுவனங்களும் தமது பணிகளை தொடரமுடியாதுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஆயுததாரிகளால் வைத்தியாசலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் பல நோயாளிகளும் தமது ஊழியர்களும் கொல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்