மட்டக்களப்பு விவசாயிகள் ரம்புட்டான் செய்கையில் ஆர்வம்

மட்டக்களப்பு விவசாயிகள் ரம்புட்டான் செய்கையில் ஆர்வம்

மட்டக்களப்பு விவசாயிகள் ரம்புட்டான் செய்கையில் ஆர்வம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 12:33 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்பட்ட ரம்புட்டான் செய்கை வெற்றியளித்துள்ளது.

இதனால் அங்குள்ள விவசாயிகள் ரம்புட்டான் செய்கை மீது கூடிய ஆர்வம் காட்டுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தின் போரத்தீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் திக்கோடை கிராமத்திலேயே இவ்வாறு பரீட்சார்த்த முறையில் ரம்புட்டான் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திக்கோடை கிராமத்தில் விவசாய் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட ரம்புட்டான செய்கை வெற்றியளித்துள்ளதால், அந்த பிரதேசத்தில் உள்ள ஏனைய விவசாயிகளும் ரம்புட்டான செய்கை மீது ஆர்வம் காட்டி வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்