பர்வேஸ் முஷாரப்பிற்கு வெளிநாட்டில் சிகிச்சை

பர்வேஸ் முஷாரப்பிற்கு வெளிநாட்டில் சிகிச்சை

பர்வேஸ் முஷாரப்பிற்கு வெளிநாட்டில் சிகிச்சை

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 12:47 pm

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பை மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

ராவல்பிண்டி இராணுவ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் முஷாரபிற்கு பாரதூரமான நிலைமை ஏதும் ஏற்படவில்லை என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ராவல்பிண்டி வைத்தியசாலை தெரிவிக்கின்றது.

மருத்துவ அறிக்கைகளை நாளை பெற்றுக்கொள்வதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் முஷாரப்பின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் வைத்தியர்களின் அறிவுரைகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பர்வேஸ் முஷாரப் மீதான தேசதுரோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த வியாழக்கிழமை இடம்பெறவிருந்தன.

நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கின்ற வழியில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியினால் முஷாரப் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி முஷாரப், ஏற்கெனவே இரண்டு தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் முஷாரப் கைது செய்யப்படலாம் என கூறப்படுவதால்  நீதிமன்றத்தில் ஆஜராகுவதை அவர் தவிர்த்து வருவதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்