நல்லூரில் வீட்டில் திருட்டு; 12 பவுண் தங்க நகைகளை காணவில்லை

நல்லூரில் வீட்டில் திருட்டு; 12 பவுண் தங்க நகைகளை காணவில்லை

நல்லூரில் வீட்டில் திருட்டு; 12 பவுண் தங்க நகைகளை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 2:50 pm

யாழ். நல்லூர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சுமார் ஐந்தரை இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த தங்காபரணங்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளதுடன், சுமார் 12 பவுண் தங்காபரணங்களும், பெறுமதியான மூன்று கையடக்கத் தொலைபேசிகளும் திருடப்பட்டுள்ளதாக யாழ். பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தெல்லிப்பழை பகுதியிலும் வீடொன்றிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் ஆறு இலட்ச ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்காபரணங்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வீட்டில் எவருமில்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்