நயனுக்கு விருது நிச்சயம் – சேகர் முல்லா

நயனுக்கு விருது நிச்சயம் – சேகர் முல்லா

நயனுக்கு விருது நிச்சயம் – சேகர் முல்லா

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 4:33 pm

வித்யாபாலனுக்கு பெயரை உருவாக்கிக்கொடுத்த ‘கஹானி’ படத்தின் தமிழ்-தெலுங்கு உருவாக்கமான ‘அனாமிகா’ வில் நயன்தாரா நடித்திருக்கிறார்.

ஆனால், இந்தப் படத்தின் முக்கிய சாராம்சமாக இருந்த கர்ப்பிணி கதாபாத்திரத்தை சாதாரணமாக மாற்றியிருக்கிறாராம் இயக்குநர் சேகர் முல்லா.

புதிதாக திருமணமான ஒரு பெண், காணாமல் போன தனது கணவரைத் தேடி வருவது போன்று படமாக்கியுள்ளாராம்.

ஆனால், ‘கஹானி’ படத்தில் கர்ப்பிணி என்பதுதான் கதையின் அடிநாதமாக விளங்கியது.

‘கஹானி’ இந்தியா முழுக்க ஓடி விட்டதால், திரும்பவும் அதையே செய்கிறபோது ரசிகர்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

அதனால்தான் இந்த பதிப்பில் நிறைய திருத்தங்களை செய்திருக்கிறேன் . ‘அனாமிகா’வில் நடித்ததற்காக நிச்சயம் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும் என்கிறார் சேகர் முல்லா.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்