தீர்வு கிடைக்காவிட்டால் ஜெனீவா செல்வோம் – நாமல் கருணாரத்ன

தீர்வு கிடைக்காவிட்டால் ஜெனீவா செல்வோம் – நாமல் கருணாரத்ன

தீர்வு கிடைக்காவிட்டால் ஜெனீவா செல்வோம் – நாமல் கருணாரத்ன

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 9:31 am

இலங்கை விவசாய சம்மேளனம் விவசாய ஒய்வூதிய திட்டம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

நிலுவை ஒய்வூதிய சம்பளத்தை வழங்காமை மற்றும் நன்மைகளை பெற்றுக் கொள்கின்ற வயதெல்லை நீடிக்கப்படுவதன் ஊடாக ஒய்வூதியம் பெறுவோரின் மனித உரிமை மீறப்படுவதாக இலங்கை விவசாய சம்மேளனம் சுட்டிக் காட்டுகின்றது.

60 வயதிலிருந்து 63 வயதாக ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் விவசாயிகளின் மனித உரிமையை மீறுவதாக இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிடுகின்றார்.

[quote]அரசாங்கம் விவசாயிகளின் மனித உரிமையை மீறுகின்றது. உயர்நீதிமன்றம் வரை செல்ல நாம் தயாராக இருக்கின்றோம். மனித உரிமை ஆணைக்குழுவினால் தீர்வொன்று பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றால், சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு அல்லது ஜெனீவா வரை இந்த பிரச்சினையை கொண்டு செல்ல நாம் தயாராகவுள்ளோம்.[/quote]இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விவசாயிகளுக்கும், நெற் சந்தைப்படுத்தல் சபைக்கும் இடையில் காணப்படுகின்ற ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்