டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்களில் வீழ்ச்சி

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்களில் வீழ்ச்சி

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்களில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 12:12 pm

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படுகின்ற மரணங்களின் எண்ணிக்கையில் 60 வீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்ற எண்ணிக்கையிலும் 50 வீத வீழ்ச்சி காணப்படுவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதன்பொருட்டு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்த மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், நுளம்புப் பெருக்கத்தை முடியுமான வரை கட்டுப்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அத்துடன் பொது மக்களும் தத்தமது சூழல்களை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்