ஜனாதிபதி மத்திய கிழக்கிற்கு விஜயம்; இயேசு பிறந்த இடத்தை பார்வையிடவும் உத்தேசம்

ஜனாதிபதி மத்திய கிழக்கிற்கு விஜயம்; இயேசு பிறந்த இடத்தை பார்வையிடவும் உத்தேசம்

ஜனாதிபதி மத்திய கிழக்கிற்கு விஜயம்; இயேசு பிறந்த இடத்தை பார்வையிடவும் உத்தேசம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 3:17 pm

மத்திய கிழக்கு நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

மத்திய கிழக்கிற்கான தமது விஜயத்தில் ஜோர்தான், பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி செல்லவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.

ஆறு நாட்கள் கொண்ட தமது மத்திய கிழக்கிற்கான விஜயத்தின் போது, இந்த நாடுகளுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்.

முதற்கட்டமாக ஜோர்தானுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அந்த நாட்டின் மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்னு அல் ஹுசேய்னை சந்திக்கவுள்ளார்.

இதனயைடுத்து பலஸ்தீனுக்கான விஜயத்தில் ஈடுபடவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசவுள்ளார்.

இதன்போது இலங்கை – பலஸ்தீன நற்புறவு சங்க உறுப்பினர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதுடன், பலஸ்தீன முன்னாள் தலைவர் யாஸீர் அரபாத்தின் ஜனாஸா  நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மண்ணறைக்கும் சென்று மரியாதை செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, பெத்லஹேமிலுள்ள இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தைய[ம் பார்வையிடவுள்ளார்.

இஸ்ரேலில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் ஜனாதிபதி ஃஷிமோன் பெரஸ் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்