செய்மதி உபகரணங்கள், பெரிய வெங்காய விதையுடன் ஒருவர் விமானநிலையத்தில் கைது

செய்மதி உபகரணங்கள், பெரிய வெங்காய விதையுடன் ஒருவர் விமானநிலையத்தில் கைது

செய்மதி உபகரணங்கள், பெரிய வெங்காய விதையுடன் ஒருவர் விமானநிலையத்தில் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 2:56 pm

பெங்களூரில் இருந்து செய்மதி உபகரணங்கள் மற்றும் பெரிய வெங்காய விதைகளுடன் நாட்டிற்கு வருகைதந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் இந்த நபரின் பயணப் பொதிகளை சுங்கப் பிரிவினர் சோதனையிட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இதன்போது 60 செய்மதி உபகரணங்கள் மற்றும் அவற்றுக்கான 200 உதிரிப் பாகங்கள், சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய பெரிய வெங்காய விதைகள் அடங்கிய பொதி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் அரச உடைமையாக்கப்பட்டதுடன், சந்தேகநபருக்கு ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்