கொல்கத்தாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை; தீர்வு வழங்கும்வரை போராட பெற்றோர் தீர்மானம்

கொல்கத்தாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை; தீர்வு வழங்கும்வரை போராட பெற்றோர் தீர்மானம்

கொல்கத்தாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை; தீர்வு வழங்கும்வரை போராட பெற்றோர் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 1:07 pm

கொல்கத்தாவில் அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்பிலான வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கும் வரை போராடுவதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் கொல்கத்தாவில் 16 வயது சிறுமி அண்மையில் பலரால்  பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த சிறுமி மீண்டும் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார.

இந்நிலையில் 16 வயது சிறுமி கடந்த 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தை அடுத்து கொல்கத்தாவில் நேற்று மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எனினும் சிறுமியையும், அவளது குடும்பத்தினரையும் காப்பாற்றுவதற்கு பொலிஸார் தவறிவிட்டதாக குறிப்பிட்டு ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முறியடிப்பதற்கான புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னரும் நாட்டில் மாற்றம் எதுவும் இல்லை எனவும்  மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்