கைதிகள் – சிறைச்சாலை அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

கைதிகள் – சிறைச்சாலை அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

கைதிகள் – சிறைச்சாலை அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வி

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 10:19 am

கண்டி போகம்பறை சிறைச்சாலையின் கூரைமீதேறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகளுடன் நேற்றிரவு சிறைச்சாலைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜீ.பி. குலதுங்க குறிப்பிட்டார்.

எனினும், கைதிகள் தமது ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இணங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டி, போகம்பறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் நேற்று பிற்பகல் முதல் சிறைச்சாலை கூரை மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரண தண்டனை மற்றும் ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்டவர்களுடன், 27 சாதாரண கைதிகளும் சிறைச்சாலை கூரை மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிடுகின்றார்.

தமக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறும், ஆயுட்கால சிறைத்தண்டனையை தளர்த்துமாறும் இந்த கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்