இலங்கை மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2014 | 5:34 pm

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 59 பேரின் விளக்கமறியல் இம்மாதம் 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இத்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட போது கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கன்னியாகுமரி கடற்பரப்பில் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த மீனவர்கள் சென்னைக்கு அண்மையிலுள்ள புழல் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

தடுத்து வைக்கப்ட்டுள்ளவர்களில் புத்தளத்தை சேர்ந்த 50 மீனவர்களும், நீர்கொழும்பை சேர்ந்த 05 மீனவர்களும், களுத்துறையை சேர்ந்த 04 மீனவர்களும் அடங்குகின்றனர்.

இவர்களது 10 இயந்திரப் படகுகளையும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்