ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேவை இடைநிறுத்தம்

ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேவை இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 7:57 am

ஹெரோயின் வைத்திருந்த சந்தேகத்தில் கைதான வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நேற்று மாலை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம், 07 நாட்கள் தடுத்துவைக்கும் உத்தரவிற்கமைய, அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்